ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

வற்றாத நதியாக வாரும் போதகரே

 

வாரும் ஐயா போதகரே

வற்றாத ஜீவநதியாக (2)

 

1.

கணுக்கால் அளவு போதாதையா

முழங்கால் (இடுப்பு) அளவும் போதாதையா

நீந்தி நீந்தி மூழ்கணுமே

மிதந்து மிதந்து மகிழணுமே       –   வாரும்

 

2.

போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே

பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே

சேருமிடமெல்லாம் ஆறுதலே

செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே  –   வாரும்

 

3.

கோடி கோடி மீனவர் கூட்டம்

ஓடி ஓடி வலை வீசணும்

பாடி பாடி மீன் பிடிக்கணும்

பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் –   வாரும்

 

4.

கரையோர மரங்கள் ஏராளமாய்

கனி தரவேண்டும் தாராளமாய்

இலைகள் எல்லாம் மருந்தாகணும்

கனிகள் எல்லாம் உணவாகணும் –   வாரும்

 



jaீvath dhannire aaviyanavare

varradha nathiyaka varum bodhakare

 

varum aiya bodhakare

varradha jaீva nathiyaka (2)

 

1.

kanukkal alavu bothathaiya

muzhangkal (idubbu) alavum bothathaiya

ninththi ninththi muzkanume

midhanththu midhanththu makizhanume       –   varum

 

2.

bokum itamellam aarokkiyame

bayum itamellam parisuthdhame

serumitamellam aarudhale

sellumitamellam sezibbuththane  –   varum

 

3.

kodi kodi minavar kudtam

oodi oodi valai vichanum

badi badi min bidikkanum

paraloka thevanukku aal serkkanum –   varum

 

4.

karaiyora marangkal eeralamay

kani dharavendum tharalamay

ilaikal ellam marunththakanum

kanikal ellam unavakanum –   varum